பெரும்பான்மையான தமிழ்த்தேசியவாதிகள் தடுமாறுகின்ற இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். 'யாருக்கான அரசியலை பேசுவது? யாருக்கான அரசியலை நாம் பேச வந்தோம்?' என்பதை எல்லாம் மறந்துவிட்டு அடிக்கடி, ''திருவள்ளுவர் என்ன சொன்னார் தெரியுமா? இதுவா தமிழரின் மாண்பு? இதுவா பிரபாகரன் பிள்ளையின் புரிதல்?'' இதுவா.. இதுவா... என்று இழுப்பது.
அட இரு.. இரு.. தம்கட்டாத.. மூச்சை விடு...
திருவள்ளுவர் காலத்தில் மலையாளி, கன்னடர், தெலுங்கர் என்ற இனமே இல்லை. திருவள்ளுவர் காலத்தில் ஒருவேளை வேற்று இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்களை நாய் போல நடத்தி இருந்தால் திருவள்ளுவரும் தூயத் தமிழ்த்தேசியவாதியாகத்தான் நின்று இருப்பார்.
சும்மா... எதையாவது சொல்ல வேண்டும். உங்களை மட்டும் மனிதப் புனிதராக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம்.
நாம் யாருக்கான அரசியல் பேசவந்தோமோ, அவர்களின் பக்கத்தில் நின்று சண்டையிடுவதுதான் உண்மையான நியாயம்.
நீங்கள் தெலுங்கருக்கான திராவிட அரசியலைப் பேசுவதாக இருந்தால், ஒரு திராவிடக் கட்சியில் இணைந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நாத்திகம் பேசுவதென முடிவெடுத்தால் ஈவே ராமசாமி நாயக்கரின் தி.க.வில் இணைந்து கொள்ளுங்கள். முழுவதாக அவர்களின் பக்கம் நின்று சண்டையிடுங்கள்.
நீங்கள் தமிழ்த்தேசியம் பேசுவதாக இருந்தால் முழுதாக இந்தப் பக்கம் நின்று வாதாடுங்கள்.
"இல்லப்பா... இந்த விசயத்தில் மட்டும் ஈவேராவை விட்டுடலாம்பா... அப்ப அப்ப திருவள்ளுவரை, காந்தியை, புத்தரை எல்லாம் சேர்த்து, கொஞ்சம் மானேத் தேனேனு கலந்துப் பேசி, நம்மலும் நாலு வார்த்தைப் படித்த மேதையெனக் காட்டிக் கொள்வோம்பா.." என்று எதையாவது உளராதீர்கள்.
என் அரசியல் தமிழருக்கானது. அதனால், தமிழர்கள் அடிபடும் போதெல்லாம் தமிழர்களின் பக்கத்தில் நின்றே வாதாடுகிறேன். மலையாளிகளின் அரசியல் மலையாளிக்கானது. தெலுங்கர்களின் அரசியல் தெலுங்கர்களுக்கானது. அவர்கள் அவர்களின் பக்கத்தில் நின்றே வாதாடுகின்றனர்.
100-க்கு 99% தெலுங்கர் திராவிட அரசியலைத்தான் ஆதரிக்கின்றனர். 100-க்கு 99% ஆரிய-பார்ப்பனர்கள் பார்ப்பனிய அரசியலைத்தான் ஆதரிக்கின்றனர். 100-க்கு 99% உருது பேசும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய கட்சிகளைத்தான் ஆதரிக்கின்றனர். ஆனால் 100-க்கு 99% தமிழர்கள் தமிழரல்லாதார் அரசியலைத்தான் நம்பி ஏமாறுகின்றனர். அவனவன் அவனவன் பக்கத்தில் நின்று நம்மை நசுக்கி நாசப்படுத்தும்போது உனக்கு மட்டும் என்ன மாண்பு புண்ணாக்கு கேட்கிறது?
எதிரில் இருப்பவன் என்ன ஆயுதம் கொண்டு தாக்குகிறானோ, அதைவிட வலிமையான ஆயுதம் கொண்டுதானே நீயும் எதிர்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு மாண்பு மண்ணாங்கட்டி உனக்கு எதற்கு?
இதுவொன்றும் திருவள்ளுவர் காலம் அல்ல. தலைவர் பிரபாகரன் தோற்றதற்கு கூட இந்த மாண்பு மண்ணாங்கட்டித்தான் காரணம்.
தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் யாரும் தெருவில் போகின்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி, ஆரிய-வடுக- பார்ப்பனர்களை அடியுங்கள், உதையுங்கள் என்று சொல்லவில்லை. "அதே அங்கெல்லாம் நம்மை அடிக்கின்றான்.. அதனால் குறைந்தபட்சம் நம் நிலத்தின் உரிமைகளையேனும் ஜனநாயகப்பூர்வமாக வென்று எடுங்கள்.." என்றுதான் கத்துகிறோம்.
தமிழ்த்தேசிய அரசியல் பேசுவதென நீங்கள் முடிவெடுத்து 'தமிழர்' என்ற அடையாளத்தோடு கட்சியின் பெயரை தேர்வு செய்த அடுத்தக் கணமே, தமிழரல்லாதார் உங்களை எதிர்ப்பதென முடிவெடுத்து, சதி செய்ய ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்கள் ஒருபோதும் உங்களுக்குப் பக்கத்தில் நிற்பதே இல்லை. நிற்பவர்களில் பலரும் துரோகம் செய்கின்ற காலம் வரும். தூய உள்ளத்தோடு தமிழரல்லாத ஓரிருவர் தமிழ்த்தேசியத்தை ஆதரிக்க வந்தாலும் மீதம் இருக்கும் 99% நபர்களும் அவர்களை மூளை சலவை செய்ய அவர் வீட்டிற்கே சென்றுவிடுகின்றனர்.
எடுத்துக்காட்டாக என் மாணவியை கூறமுடியம். பெயர் வெளியிட விரும்பவில்லை. அவள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவள். நான் பேசிய தமிழ்த்தேசியம் தமிழரல்லாதாருக்கு எதிரானது அல்ல என்பதை புரிந்துகொண்டு என்னோடு களத்தில் நின்றாள். அவளை அவரது உறவுக்காரர்கள் சூழ்ந்து உட்கார்ந்து கொண்டு, பல நூறு கேள்விகளைக் கேட்டு தமிழ்த்தேசிய அரசியலைவிட்டு வெளியேற சொல்லி நிர்பந்தித்து இருக்கின்றனர். ஏன் அதை அவர்கள் செய்ய வேண்டும்?
தமிழ்த்தேசியம் யாருக்கும் எதிரானது அல்ல. அதேசமயத்தில் தமிழருக்கு உயிரானது என்று பலமுறை நாம் வலியுறுத்திச் சொல்லியும் எவன் நம் பக்கத்தில் வந்து நின்றான்?. அத்தோடு தெலுங்கர்களுக்கோ, மலையாளிகளுக்கோ, கன்னடர்களுக்கோ அவர்களுக்கென ஆள்வதற்கும் வாழ்வதற்கும் பெரும் நிலப்பரப்பை நாம் பிரித்து தந்துவிட்டப் பிறகு, மீண்டும் நமக்கென்று இருக்கும் ஒரேவொரு தாய் நிலத்திலும் வந்து உட்கார்ந்து கொண்டு நிலத்தின் அரசியல் அதிகாரத்தை அபகரிப்பது பெரும் கொடுமை அல்லவா?
ஒரு உறவினராக என் வீட்டிற்கு வாருங்கள்.. உணவு அருந்துங்கள்.. ஓய்வெடுங்கள்.. அதற்காக வீடே என்னுடையதுதான் என்று அதிகாரம் செலுத்தாதீர்கள் என்றுதானே நாம் அறிவுறுத்துகிறோம். அதையும் ஏற்க மனமில்லாத தமிழரல்லாதோரை வேறென்ன செய்வது. அதற்காகத்தான் நேற்று தமிழரல்லாதாரின் வருகையை கணக்கிடுங்கள் என்று அரசைக் கேட்டுக் கொண்டேன்.
எவன் வருகிறான்.. போகின்றான்.. என்றே தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு இது என்ன திறந்த வீடா?
இது தமிழர்களின் தாய் நிலம். இதன் அதிகாரம் முழுவதும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே உண்டு. இதை சொந்தம் கொண்டாட தமிழர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
'நாங்களும் பல காலமாக இங்குதான் வாழ்ந்தோம்.. பேண்டோம்..' என்பதற்காகவெல்லாம் பூர்வகுடி நில உரிமையையோ, அரசியல் அதிகார உரிமையையோ தரமுடியாது. வாழுங்கள் அதில் எந்தப் பிரச்சனையும் அல்ல. எங்களால் எவருக்கும் துன்பம் வராது. ஆனால், தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைத்து இருக்கும் சுகபோக வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்கள். இது எச்சரிக்கை.
நாங்களும் மாண்போடு நடந்து கொள்வோம்.. எதிரில் இருப்பவரும் அதே மாண்போடு நடக்கும் போது...
இது வேட்டை உலகம்..
இதில் அகிம்சையை பேசுபவன்தான் முதலில் வேட்டையாடப்படுவான்..
தமிழர்கள் வேட்டையில் இருந்து தற்காத்துக் கொள்ளவே துடிக்கின்றனர்.. இன்னும் வேட்டையாடத் தொடங்கவில்லை..
அதுவே மாண்புதான்... போதும் போ...
-பேராசிரியர் ஆ. அருளினியன்
Your email address will not be published. Required fields are marked *