முள்ளிவாய்க்காலை ஒட்டி இங்கே ஏற்பட்ட தமிழர்களின் எழுச்சியை கொண்டு சில பல தமிழர் கட்சிகள் இயக்கங்கள் அமைப்புகள் உதிக்கின்றன. தமிழ்தேசிய கட்சிகள் அமைப்புகளில் யார் தமிழர் என்ற வரையரையில் ஏற்பட்டிருக்கும் கொள்கை சமரசமும் குழப்பான சூழலில் தான்..
'செல்வா பாண்டியர்' என்கிற மகத்தான சிந்தனையாளனின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அப்படி என்ன செய்துவிட்டார் #செல்வாபாண்டியர்...
தமிழர்களுக்கான கட்சி, அமைப்பு என்பவற்றுக்கு வலுவான கருத்தியல் அடிப்படை தேவை. அடித்தளம் இல்லாத மக்கள் அரசியல் எளிதில் வீழ்த்தப்படும் என்பதை தெளிவாக உள்வாங்கி இருந்தார்.
தமிழர் மட்டும் அல்ல, இந்தியாவின் மொத்த தேசிய இனங்களுக்குமான வரையறை ஒன்றே ஒன்று தான். ஒவ்வொரு தேசிய இனங்களும் இனக்குழுக்களால் அடங்கியவை, அந்த இனக்குழுக்களை தான் நாம் நாளடைவில் சாதி (குடி) என்கிறோம் என்பதை வலியுறுத்தினார். சாதி என்பது கூரான கத்தி. அதை மிகச் சரியாக பயன்படுத்தினால், இனத்தின் எழுச்சி சாத்தியம் என்பதை கண்டுணர்கிறார்.
'சாதி கடந்து தமிழனாக' வா என்று பேசிய தமிழ் தேசியம் பேசிய தலைவர்கள் மத்தியில், 'சாதி (தமிழர் குடிகளை) வைத்து தான் தமிழர் மட்டும் அல்ல எந்த இனத்தையும் வரையறுக்க முடியும்' என்பதை பொட்டில் அடித்தார் போல பரப்புரை செய்தார்.
அந்தக் காலத்தில் இவரின் இந்த நிலைப்பாடு படு பிற்போக்கு தனமாகவும், மோசமான சிந்தனையாகவும் பார்க்கப்பட்டது. எப்போதும் காலத்தை விஞ்சி சிந்திக்கும் 'செல்வா பாண்டியரின்' இந்த வரையறை தான் நாளை தமிழகத்தை, தமிழர்களை காக்கும் தமிழர்குடி அரசியல் தான் 'செல்வா பாண்டியர்' தனித்து வெற்றி பெறுகிறார்.
அறிவால்,ஆற்றலால் நம்மை விஞ்சி நின்ற 'செல்வா பாண்டியர்', காலத்தாலும் நம்மை எல்லாம் விஞ்சி இயற்கையுடன் கலந்து "தமிழர் தேசிய தந்தை" எனும் பேற்றையும் அடைந்துவிட்டார்..
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் 'இயற்கையே என் வழிகாட்டி' என்பார். அப்படி இயற்கையோடு இயற்கையாக கலந்துவிட்ட 'செல்வா பாண்டியர்', நாளை ஆள போகும் தமிழர் தேசியம் என்கிற ஆல மரத்தின் தாய் வேராக இருப்பார் என்பதில் ஐயமில்லை.
அத்தகைய மாபெரும் சிந்தனையாளனின் நினைவு தினத்தை தமிழர்குடிகள் “தமிழர் தேசிய ஒளியூட்டி நாளாக" கடைப்பிடித்து கரம் கோர்ப்போம்!
தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டிருக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்!!
Your email address will not be published. Required fields are marked *