தமிழ்குடி ஒற்றுமையே!

தமிழனத்தின் விடுதலை!

தமிழகம்

இன விடுதலை போராட்ட போர்கள பேராசிரியர் அறிவரசன்

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், புத்தன் பேசுகிறான் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் அறிவோம் என்ற பெயரில் இலக்கணம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கி மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார். அந்த அனுபவங்களை ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இதுதவிர, தமிழ்ப் பெயர் கையேட்டை எழுதியுள்ளார். லண்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பித்துள்ளார்.

பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் தமிழிசை பாவாணர் என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் சார்பில் பைந்தமிழ் பகலவன் என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளன.

இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி, தினமணியின் அம்பாசமுத்திரம் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வரும் அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது.

ஐயாவிற்கு தமிழர்குடிகளின் சார்பாக வீரவணக்கம்!

4315994928601303690761.jpg

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *





பிரபலமானவை