இந்த புகாரில் ஒவ்வொருவரும் கையெழுத்து இட்டு ஆதரவு தெரிவிப்பதோடு
முகநூல் குழுக்களிலும் பகிர்ந்து நமக்கு தெரிந்தவர்கள் நண்பர்களுக்கும் இதுபற்றி தெரிய படுத்தி கையெழுத்து இடசொல்லுங்கள்..
1) நம் முகநூலில் நம் நண்பர்கள் குறைந்தது 10 பேரையாவது குறிப்பிட்டு (Tag) செய்து அதை ஒரு நண்பருக்கு சவால் செய்து இதேப்போல் அவர்கள் நண்பர்கள் பத்து பேரை டேக் செய்து அவரின் நண்பருக்கு சவால் விடவேண்டும்.
2) நாம் பயணிக்கும் முகநூல் குழுக்கள், பகிரி(whatsup) புலணம்( messenger) குழுக்களில் பகிர்வோம்.
3) இந்த கோரிக்கையை முன்னிருத்தி ஒரு நிமிட காணொளி போட்டு பரப்புரை செய்து அனுப்பினால், உங்கள் காணொளியை தமிழர்குடிகள் பக்கத்தில் வளையொளியை பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுத்து நம் இனத்திற்கான தேவையை பூர்த்தி செய்து கொள்வோம்.
4) “தமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே” என்ற தலைப்பில் கட்டுரை எழுதுபவர்கள் உங்கள் எண்ணங்களை கட்டுரை வடிவில் கொடுத்தால் அதை தமிழர்குடிகள் உங்கள் பெயரிலேயே வெளியிடுவோம்..
நம் நாட்டில் நம் உரிமையை பேணி காப்பது நம் ஒவ்வோருவரின் தலையாய கடமை என்பதை உணர்ந்து இது நம் அடுத்தடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் நம் இனத்தின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்!
முக்கியகுறிப்பு:
நாம் போடும் ஓவ்வோரு பதிவிலும்
#தமிழர்கள்நலவாரியம்வேண்டும் என்ற hash tag யும் இணைத்து பெருவாரியானவர்களிடம் சென்றடைந்து பேசுபொருளாக்கப்படும்..
நன்றி
தமிழர்குடிகள்
புகார் அளிக்க இணைய இணைப்பு:-
Your email address will not be published. Required fields are marked *