“அர்த்தமண்டபம்” “மகா மண்டபம்” , “நடராஜர் அலங்கார மண்டபம்”, “கருவறையிலும்", "கலசத்திலும்" தமிழ்முறை பாராயணம், தேவாரம் பாட தீர்ப்பு வந்துள்ளது ..
நம் உயிர் மொழி அனைத்து தளங்களிலும் ஒலிக்கபோகிறது.
உலகெங்கும் உள்ள 13 கோடி தமிழர்களும் இந்த வெற்றியை கொண்டாடுவோம்...
இதற்கு இரவு பகலாக உழைத்த சகோதரர் செந்தில்நாதன் துரைராசன்(வீரத்தமிழர் முன்னனி), சகோதரர் தீரன் திருமுருகன்(தமிழர் கட்சி), ஐயா மணியரசன்(தமிழ்தேசிய பேரியக்கம்) மற்றும் தமிழில் குடமுழுக்கு தீர்ப்பு வர உழைத்த அனைத்து வழக்கறிஞர்களுக்கும் தமிழர்குடிகளின் சார்பாக கோடான கோடி நன்றிகள்...
மேலும் இனி தமிழர் நாட்டில் அனைத்து கோவில்களிலும் தமிழில் மட்டுமே தமிழ் ஓதுவார்களால் தேவாரம் திருவாசகம் என தமிழர் தெய்வங்களை தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த ஒட்டு மெத்த தமிழர்குடிகளும் வேண்டுகோள் வைத்து தேவையான நீதிமன்ற வழக்கையும் தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தோவோம் .. தமிழர் நிலமெங்கும் தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்
-தமிழர்குடிகள்
Your email address will not be published. Required fields are marked *